சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா செல்லம்மா என்ற பாடல் யூ-ட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தின் மூலம் நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். படத்திற்கு இசை அனிருத்.

டாக்டர் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அனிருத், ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இந்தப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது செல்லம்மா செல்லம்மா பாடல் யூ-ட்யூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்திருக்கும் சிவகார்த்திகேயன், அனிருத்திடமிருந்து மற்றுமொரு செஞ்சுரி எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர டாக்டர் படம் மார்ச் 26-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு கமெண்ட் செய்த ராக்ஸ்டார் அனிருத், செல்லம்மா பாடலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆடிய நடனத்திற்கு டபுள் செஞ்சுரியே வரும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.