விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ரிலீஸ் ஆனது முதலே பெரிய வரவேற்பை பெற்று வந்தது.வீடியோ வருவதற்கு முன்பே ஆடியோ லான்ச்சில் விஜய் ஆடிய ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.பாடல் வரிகள் இல்லாமல் மியூசிக் மட்டும் வருவதால் இந்த பாடல் இன்டர்நேஷனல் லெவல் வரை ரீச் ஆனது.

குழந்தைகள்,பெரியவர்கள் என்று பலரும் இந்த பாடலுக்கு தங்கள் வெர்ஷனை பதிவிட்டு அசத்தி வந்தனர்.மொழியை தாண்டி பல வெளிநாட்டினர்,கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தி வந்தனர்.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார்.

பிக்பாஸுக்கு பிறகு கவினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.கவின் என்ன செய்தாலும் அதனை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வந்தனர்.தற்போது ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கவின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.