ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். விஷால் 30 மற்றும் ஆர்யா 32 ஆன இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவும் சம்மதம் தெரிவிக்கவே, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. அக்டோபர் 16-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தமிழில் லென்ஸ், வெள்ளை யானை மற்றும் திட்டம் இரண்டு ஆகிய படங்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது தமிழ்ப் படம் இதுவாகும்.இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த மாதம் இணைந்தார் புரட்சி தளபதி விஷால். விஷால் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டது படக்குழு. முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். படத்தின் ஓப்பனிங் சாங் காட்சிகளை சமீபத்தில் படமாக்கினர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சமீபத்தில் நடிகை மிருணாளினி ரவி படத்தில் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது. இதுகுறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படப்பிடிப்பில் நடிகர் கருணாகரன், மிருணாளினி ரவி, பேபி மானஸ்வி ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஆர்யா கலந்த கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 

விஷால் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் சக்ரா. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கிய இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டானது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.