ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.

புதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.புதிய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த தொடரில் முக்கிய வேதமான ஐஸ்வர்யா என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி அசோக் குமார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

தற்போது இந்த தொடரில் இருந்து இவர் நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை ரசிகர்களுடன் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துகொண்டார் ஜனனி.மிகவும் எமோஷனாலா ஜனனி செம்பருத்தி தொடர் குறித்தும் அதில்'நடிக்கும் நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்