சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன்.விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினான இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஓகே கண்மணி,கேம் ஓவர்,ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக அவ்வப்போது தனது ரசிகர்களுடன் லைவ்வில் பேசியும்,அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வார்.அவ்வப்போது டிக்டாக் செய்தும் தனது
திறமையை வெளிப்படுத்தி வந்தார் ரம்யா.

இவரது டிக்டாக் விடீயோக்களும்,இன்ஸ்டாகிராம் போஸ்டுகளும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.இவர் போடும் விடீயோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.தற்போது தனது டிக்டாக் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ரம்யா.

நேற்று இந்திய அரசு சீனா தயாரித்த 59 செயலிகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது.இந்த செயலிகள் பயனாளர்களின் பெர்சனல் விஷயங்களை திருடுவதாக குற்றம் சாட்டி இந்த செயலிகளை தடை செய்தனர் இந்திய அரசாங்கம்.இதில் பயனர்கள் அதிகம் உள்ள டிக்டாக்,ஹலோ உள்ளிட்ட முக்கிய செயலிகள் இடம்பெற்றன.டிக்டாக் பல பயனர்களின் தினசரி பொழுதுபோக்காக இருந்து வந்தது.இதனை தடை செய்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த செயலி தடை செய்யப்பட்டதை அடுத்து ,பலரும் இந்த செயலியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.இந்த செயலி தனக்கு கடந்த சில மாதங்களாக நல்ல பொழுதுபோக்காக இருந்தது என்றும் இதில் இருந்து விடைபெறுகிறேன் என்றும் தற்போது ரம்யா தனது கடைசி டிக்டாக்கை பதிவிட்டுள்ளார்.