ஜீவா சீறு படத்தின் ரிலீஸை அடுத்து தனது முதல் பாலிவுட் படமான 83-ல் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகியுள்ளது.இந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார்.

ரன்வீர் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடித்துள்ளார்.தீபிகா படுகோனே இந்த படத்தில் ரன்வீருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படத்தை கபீர் சிங் இயக்கியுள்ளார்.இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி 2020 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழ் திரையரங்க உரிமையை உலகநாயகன் கமல்ஹாசன்,ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த படம் நேரடியாக OTTயில் வெளியாகும் என்று வதந்திகள் பரவி வந்தன.இந்த படம் நிச்சயமாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு பலமுறை நம்பிக்கை தெரிவித்தும் இந்த வதந்தி ஓய்ந்ததாக இல்லை.தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் கிறிஸ்துமஸ் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.இதோடு அக்ஷய் குமார் நடித்துள்ள Sooryavanshi திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.