திரையுலகில் இதுவரை வெளிவந்து ஹிட்டான அனைத்து படங்களிலும் இருந்து ஒரு சில விஷயங்களை எடுத்து அதை கலாய்க்கும் விதத்தில் படமாக உருவாக்கப்பட்டிருந்தது தான் தமிழ் படம். இதனை சி. எஸ். அமுதன் தான் இயக்கியிருந்தார். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த இந்தப் படம் 2010-ம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமா ரெஃபரென்ஸ் உடன் திரையில் காட்டியிருப்பார் இயக்குனர் அமுதன். கோலிவுட் ரசிகர்களும் ஸ்பூஃப் படம் பார்ப்பது இதுதான் முதல்முறை. அதனால் தமிழ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. 

இதன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க போலீஸ் அத்தியாயமாக உருவாக்கப்பட்டது. 2018-ல் வெளிவந்த இந்த படத்தில் போலீஸ் படங்களை கலாய்த்து இருந்தனர். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டாம் பாகத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார். வில்லனாக சதீஷ் நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் வில்லன்களை கலாய்க்கும் விதத்தில் சதீஷ் பல விதமான கெட்டப்புகளில் தோன்றியிருப்பார்.

கொரோனாவால் இந்த ஆண்டு திரைத்துறைக்கு பெரிய நஷ்டம் என்றே கூறலாம். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் CS அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இந்தி மொழி கற்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். வாக்கியங்களை சரியாக உருவாக்குகிறேனா என்று சொல்லுங்கள் என்ற பதிவை செய்துள்ளார். யே பூரா டுபாக்கூர் ஹே என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். 

ஊரடங்கு குறித்தும், கொரோனா பரவல் பற்றியும் சரியாக மாலை 4 மணியளவில் மக்களுக்கு பாரத பிரதமர் மோடி லைவ்வில் தோன்றி பேசினார். இந்தியில் அவர் பேசியது இந்தி மொழி அறியாத மக்கள் பலருக்கும் புரியவில்லை. இருந்தாலும் அவர் பேசும் போது செய்தி தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். அதனை கிண்டலடிக்கும் வகையில் தான் இந்த பதிவை CS அமுதன் செய்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். 

காமெடி படங்கள் எடுப்பதால், எப்போதுமே அவர் கிண்டல் கேலியாக தான் பேசுவார் என்று எண்ணிவிட முடியாது. நிஜமாகவே இந்தி கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்திருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.