கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

இந்த ஆண்டு மே 1-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இதன் ரிலீஸ் தேதி தெரியவில்லை. தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என்று ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஜூலை மாதம் முழுவதும் தரமான அப்டேட்டுகளுடன் வரவிருப்பதாக தெரிகிறது. பாடலா அல்லது ட்ரைலரா என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். 

இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், பாலிவுட் படமான அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் D43 போன்ற படங்கள் தனுஷ் கைவசம் உள்ளது. இதைத்தொடர்ந்து சியான் 60 படத்திற்கான வேலைகளில் இறங்கவுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.