ஒரு பெண்ணுடன் ஒரே நேரத்தில் 2 இளைஞர்கள் கள்ளத் தொடர்பில் இருந்ததால், ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு கொலையில் முடிந்துள்ள இந்த முக்கோண கள்ளக் காதல் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு முக்கோண கள்ளக் காதல் சம்பவம் அரங்கேறி, கொலையில் முடிந்திருக்கிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரை அருகில் உள்ள இரணியல் ஆர்.சி.தெரு பகுதியைச் சேர்ந்த 28 வயதான சுஜித், அங்குள்ள திங்கள் நகர் மார்க்கெட்டில் மீன் வியாபரம் செய்து வந்தார். இவருக்கு, இன்னும் திருமணம் ஆகாத நிலையில், இவருக்கு வரன் பார்க்கும் படலாம் நடந்துகொண்டு இருக்கிறது. 

இப்பியான சூழலில், மீன் வியாபரியான சுஜித், அங்குள்ள மாங்குழி வாடிவிளைப் பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண்ணுடன் கள்ளக் காதல் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், சுஜித் போலவே, அங்குள்ள ங்கள் நகர் பெரியாபள்ளி பகுதியைச் சேர்த்த நாராயணன் மகன் சுரேஷ் என்கிற லாரி சுரேஷ் என்ற இளைஞரும், குறிப்பிட்ட அதே 37 வயது பெண்ணுடன், கள்ளக் காதல் உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவரும், அந்த பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், சுஜித் செல்போனுக்கு ஒரு போன் வந்துள்ளது. அப்போது, எதிர் முனையில் அழைத்த சுரேஷ், “உங்களிடம் கொஞ்ச பேச வேண்டும். நீங்கள் மேலமாங்குழி குளத்தின் அருகில் வாருங்கள்” என்று, சுரேஷ் அழைத்திருக்கிறார். இதனால், சுஜித் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பன் 19 வயதான ஸ்டெபினை அழைத்துக்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு சென்று உள்ளனர்.

அப்போது, அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளியான நடுத்தேரி ஆற்றின்கரையைச் சேர்ந்த ராபி என்கிற விமல் ஆகிய இருவரும் வந்து நின்று உள்ளனர். அப்போது, அங்கு சுஜித் தனது கூட்டாளியுடன் வந்த நிலையில், சுஜித் உடன் சுரேஷ் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, இந்த பேச்சு வார்த்தை அவர்களுக்கு பெரும் வாக்குவாதமாக மாறி உள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந் சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென்று சுஜித்தின் மார்பு, வயிறு பகுதிகளில் குத்தி உள்ளான். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சுஜித், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அத்துடன், சுஜித்துடன் வந்த ஸ்டெபினையும், அவர்கள் அடித்து விரட்டி உள்ளனர். இதனால் பதறிப்போன சுஜித்தின் நண்பன் ஸ்டெபின், இந்த கொலை குறித்து 

இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சுஜித்தின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், மாங்குழி வாடிவிளைப் பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண்ணுடன் சுஜித் - சுரேஷ் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கள்ளக் காதலில் இருந்து வந்ததும், இது தொடர்பான பேச்சு வார்த்தையில் அவர்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டு, இந்த கொலை நடந்துள்ளது என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

அது போல், சுஜித்தை கொலை செய்த சுரேஷ் மீது, ஏற்கனேவே கடந்த 2003 ஆம் ஆண்டு பூசாஸ்தான் விளையைச் சேர்ந்த சுதர் என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கு, கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கு ஆகியவை இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, சுஜித்தை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளி ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.