ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

கொரோனா காரணமாக பழைய எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பட்டு வருகின்றன.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ஷபானா.மேலும் சில நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.

இந்திய அரசு சீனா தயாரித்த 59 செயலிகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது.இந்த செயலிகள் பயனாளர்களின் பெர்சனல் விஷயங்களை திருடுவதாக குற்றம் சாட்டி இந்த செயலிகளை தடை செய்தனர் இந்திய அரசாங்கம்.இதில் பயனர்கள் அதிகம் உள்ள டிக்டாக்,ஹலோ உள்ளிட்ட முக்கிய செயலிகள் இடம்பெற்றன.

டிக்டாக் பல பயனர்களின் தினசரி பொழுதுபோக்காக இருந்து வந்தது.இதனை தடை செய்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த செயலி தடை செய்யப்பட்டதை அடுத்து ,தங்களது கடைசி டிக்டாக் வீடீயோவை பகிர்ந்து வருகின்றனர்.ஷபானா தனது பழைய டிக்டாக் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இந்த கியூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.