குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்தி. வளர்ந்த பிறகு வெற்றி திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சயில் விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும், நடிகர் கணேஷ்கருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தயாரிப்பாளர்களின் நலன் கருதி இந்த ஊரடங்கில் நல்ல முடிவை எடுத்தார். ஒரு வருடத்திற்கு நான் நடிக்கின்ற படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கி கொள்கிறேன் என்று கூறினார். ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் நம்ம முதலாளி. அவர்கள் நல்லா இருந்தா தான், நாம நல்லா இருக்க முடியும்.  என்னோட சின்ன பங்களிப்பு இது என்று முடிவெடுத்தார். 

சமீபத்தில் ஃபேஸ்ஆப் சேலஞ்சை ஏற்று தன் புகைப்படத்தை ஆண் போன்று மாற்றி புகைப்படத்தை வெளியிட்டார். அதை ட்விட்டரில் வெளியிட்டு, இவர் தான் என் புது காதலர், என் க்யூட் டார்லிங். இவரை தான் நான் திருமணம் செய்யப் போகிறேன். சாரி கணேஷ்கர் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது புருவத்தை ஷேவ் செய்த படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் போட்டோ எடிட்டிங் ஆப் மூலம் இதை அவர் செய்துள்ளார்.  

சமூக வலைத்தளங்களில் ஆர்த்தி காமெடியாக வீடியோக்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தன்னைத் தானே கலாய்த்தும் புகைப்படங்களை வெளியிடுவார். அது தான் ரசிகர்களுக்கு ஆர்த்தியிடம் பிடித்த விஷயம். தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் வராது என்று பாராட்டி வருகின்றனர்.