A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ஏழு வித்தியாச தோற்றங்களில் விக்ரம் இருக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது.இந்த படத்தின் முதல் பாடல் தும்பி துள்ளல் என்ற தகவலை முதல் முறையாக கலாட்டாவுடனான நேர்காணலில் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார்.இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்ற தகவலையும் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்த பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் Abhyankar இணைந்து பாடியுள்ளனர் என்றும் விவேக் மற்றும் ஜிதின் ராஜ் இந்த பாடலை இணைந்து எழுதியுள்ளனர்.இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் அஜய் ஞானமுத்து.அதில் சிலவற்றை பார்க்கலாம் தும்பி துள்ளல் பாடலை அனிமேஷன் வீடியோவாக ரிலீஸ் செய்தது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டத்திற்கான பீலிங்கை தருவதற்கு தான் என்று தெரிவித்தார்.

கோப்ரா படம் OTT-யில் வெளியாகுமா என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.இந்த படம் Split படத்தின் தழுவலா என்று ரசிகர் கேட்டதற்கு இரண்டு கதைக்கும் சம்மந்தமே இல்லை என்று தெரிவித்தார்.கோப்ரா படத்தின் 30% ஷூட்டிங் மீதமுள்ளது என்றும் நிலைமை சரியானவுடன் லிந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் ஸ்டுடியோவில் ஷூட்டிங் செய்யப்போவதில்லை மீண்டும் ரஷ்யாவிற்கு செல்லவேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார்.விக்ரமுடனும்,ஏ.ஆர்.ரஹ்மானுடன் வேலை பார்த்தது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.