விஜய் டிவியின் மதுரை சீரியலின் மூலம் தமிழ் சீரியலில் தங்கள் தடத்தை பதித்தவர்கள் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா.இவர்களது ஜோடி பொருத்தம் செமையாக ஒர்க்கவுட் ஆக , இதனை தொடர்ந்து விஜய் டிவி இவர்கள் இருவரையும் இணைந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரை தொடங்கியது.

இந்த தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருவருக்கும் பெரிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது.இருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நிறைய விருதுகளையும் தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளனர்.இந்த தொடரில் நடித்தபோதே இருவருக்கும் காதல் வயப்பட்டு செந்தில்-ஸ்ரீஜா திருமணம் கடந்த 2014-ல் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு 2016-ல் இருவரும் இணைந்து விஜய் டிவியின் மாப்பிள்ளை தொடரில் நடித்து வந்தனர்.ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்த இந்த தொடர் 200க்கும் மேற்பட்ட அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டது.இதனை அடுத்து செந்தில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தார்.இந்த தொடரின் முதல் சீசன் நிறைவடைந்து தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக சென்று வருகிறது.

கல்யாணம் கண்டிஷன்ஸ் ஆஃப்லைட் என்ற வெப் சீரிஸில் இருவரும் ஒன்றாக நடித்தனர்.ஸ்ரீஜா-செந்தில் இருவரையும் ஜோடியாக மீண்டும் சீரியல்களில் பார்க்கவேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தின் இருக்கின்றனர்.தற்போது ஸ்ரீஜாவின் இளைய தங்கைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இது குறித்த புகைப்படங்கள் சிலவற்றை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)