இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான யாமி கவுதம் கன்னட  மொழியில் வெளியான உல்லாச உட்ஷா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம், தெலுங்கு,இந்தி, தமிழ் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராதாமோகன்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கிய கௌரவம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.பாலிவுட்டில் வெளியான யு ஆர் ஐ தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்  இயக்குனர் ஆதித்யா தர். 

பாலிவுட் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான ஆதித்யா தர், காபுல் எக்ஸ்பிரஸ், One Two Three உள்பட சில திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவர் இயக்கிய யு ஆர் ஐ தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் திரைப்படத்தில் யாமி கவுதம் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இயக்குனர் ஆதித்யா தர் நடிகை யாமி கௌதம் திருமணம் இன்று மிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு  எளிமையாகவும் மிகுந்த  மகிழ்ச்சியோடும் நடைபெற்றது. இன்று திருமணம் செய்து கொண்ட யாமி கவுதம் ஆதித்யா தர் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.