தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் மெஹரீன் பிர்சாடா.தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான NOTA படத்தில் நடித்திருந்தார்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து அசத்தி வந்தார் மெஹரீன்.2019-ல் இவர் ஹீரோயினாக நடித்த Fun and Frustration திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் முடித்திருந்தது.இதனை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் மெஹரீன்.

இந்த படம் 2020 பொங்கலன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் அடித்திருந்தது.இவரது கதாபாத்திரத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் மெஹரீன்.

எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் ஷேர் செய்து மகிழ்வார்.சமீபத்தில் இவருக்கு Bhavya Bishnoi என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்தது.திருமணத்துக்கு முன் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்துள்ளார் மெஹரீன்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.