வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் தொலைக்காட்சி விஜய் டிவி.இவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து பல முன்னணி தொலைக்காட்சிகளும் அதையே மீண்டும் தங்கள் சேனலில் ஒளிபரப்புவார்கள்.

அப்படி விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.சாதாரண மக்களிடம் இருக்கும் பாடும் திறமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் வாங்கி தரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் உள்ளது.இந்த தொடரில் பங்கேற்ற பலரும் பிரபலன்களாக மாறியுள்ளனர்.பலர் பின்னணி பாடகர்களான உயர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் பிரபலன்களாக மாறியுள்ளனர்.சில வருடங்களுக்கு இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் பதிப்பில் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் ஸ்ரீநிஷா.திரைப்படங்களில் சில சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

தற்போது Login என்ற படத்தில் நோ மட்டும் சொல்லாத என்ற பாடலை விபின் இசையில் ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து பாடியுள்ளார்.இந்த பாடலை ஜீவி யுடன் இணைந்து பாடியது பெரும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்