செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் இசை மற்றும் பிஜிஎம்-க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல், ட்ரைலர் வெளியானபோது எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கூடியது.

ஆனால் திரைப்படம் வெளியாகாமல் நாட்கள் ஓடின. நீண்ட நாட்களுக்கு பின் நெஞ்சம் மறப்பதில்லை குறித்த உறுதியான தகவல் வெளியானது. திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது. இது குறித்து ட்வீட் செய்த செல்வராகவன், நெஞ்சம் மறப்பதில்லை மார்ச் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் செல்வராகவன் ரசிகர்கள். 

இந்நிலையில் படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடித்து கொலை செய்வது போல் இருக்கும் காட்சிக்கு நிச்சயம் திரையரங்கில் விசில் பறக்கும் என்றே கூறலாம். 

செல்வராகவன் தற்போது தனுஷ் வைத்து நானே வருவேன் படத்தை இயக்கவுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். 

எஸ்.ஜே.சூர்யா தற்போது கடமையை செய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள். வெங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். 

எஸ்.ஜே.சூர்யா கைவசம் மாநாடு திரைப்படம் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.