பிரபல மாடல் ஆக இருந்து சீரியல்களில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ருதி செல்வம்.விஜய் டிவியில் அசீம் நடிப்பில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஸ்ருதி செல்வம்.இந்த தொடரிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ருதி.

அடுத்ததாக ஜீ தமிழ் சேனலின் சூப்பர்ஹிட் தொடரான யாரடி நீ மோஹினி தொடரில் சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ஸ்ருதி செல்வம்.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார் ஸ்ருதி செல்வம்.

பிக்பாஸ் புகழ் சாண்டி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி செல்வம் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் ஹீரோயினாகும் தனது கனவை நிறைவேற்றியுள்ளார் ஸ்ருதி செல்வம்.தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ருதி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.நடனத்திலும் பெரிய ஆர்வம் கொண்ட ஸ்ருதி நடன வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் தற்போது தனக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.