தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மிக குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளவர் மாளவிகா மோஹனன்.மலையாளம்,கன்னடம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார் மாளவிகா மோஹனன்.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மாளவிகா.

தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாளவிகா மோஹனன்.அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.திரையரங்குகள் திறந்ததும் இந்த படம் ரிலீசாகும் என்று தெரிகிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் இவரது போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளும்.இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ஆக இருந்த மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்த பின் வேற லெவல் ரீச்சை பெற்று விட்டார்.இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.அதனால் ரசிகர்கள் தினமும் இவரது பக்கத்தை கவனித்து வருவார்கள்.இந்நிலையில் இன்று திடீரென இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சில மணி நேரங்கள் மாயமானது,இதனால் ரசிகர்கள் மீம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து மாளவிகா அக்கவுண்ட் எங்கே என்று அதிர்ச்சியில் இருந்தனர்.இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட டெக்கனிக்கல் கோளாறு காரணமாக இவரது அக்கவுண்ட் சிறிது நேரம் மயமானது என்பது தெரியவந்துள்ளது.தற்போது இவரது அக்கவுண்ட் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.இதனை தொடர்ந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.