சினிமாவில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல அஜித். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. 

தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகிறது. படக்குழு தரப்பில் இருந்து வலிமை படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் பிரபல நாளிதழின் பேட்டி ஒன்றில் பேசிய வலிமை பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் தீம் மியூசிக் குறித்து பேசியிருந்தார். அதாவது கிட்டார் பயன் படுத்தாமல் படத்தின் பின்னணி இசையை கம்போஸ் செய்ததாக கூறினார். 

இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. அப்போது ரசிகர்கள் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித்தின் இடதுகையில் பெரிய தழும்பு உள்ளது. இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி ஆகினர். 

இது படப்பிடிப்பின் போது ஆனதா? அல்லது வெளியில் இருக்கும் போது ஏற்பட்டதா? என ரசிகர்கள் கவலையுடன் கேட்டு வருகின்றனர். ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். வலிமை படத்தின் அப்டேட் கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கிடந்த நிலையில் தல அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.