கோடையின் பெரிய திருவிழாக்களில் ஒன்று ஐபிஎல் தொடர்.தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,இந்த தொடர் நடக்குமா இல்லையா என்ற பல போராட்டங்கள் வந்து சென்றன.முக்கிய ஸ்பான்சர்களில் மாற்றம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை இந்த வருட ஐபிஎல் தொடர் சந்தித்துள்ளது.ஒருவழியாக இந்த தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது.

12 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 13ஆவது சீசன் UAE-யில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எட்டு அணிகளும் தங்கள் திறமையை நிரூபிக்க போராடி வருகின்றனர்.கிட்டத்தட்ட டதொடர் முடியப்போகும் நிலையில் இன்னும் எந்த அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தெரியாமல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் ஆஸ்தான அணியான சென்னைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏராளமான ஆதரவு உள்ளது அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.கடந்த உலகக்கோப்பை 2019 அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு , தற்போது தான் தோனி களத்தில் இறங்கப்போகிறார் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.இந்த முறை சென்னை அணிக்கு சரியானதாக அமையவில்லை முதல்முறையாக போட்டியை விட்டு லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை  எதிர்கொள்கிறது,புல்லிபட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் மோதுவதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.மேலும் இந்த போட்டியில் வெல்லும் அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்பதால் போட்டி மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மாஸ்டர் படத்தின் பாடலுடன் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.