தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரிகிடா நடித்து வருகிறார்.யூடியூபில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரிகிடா ,இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.அவர் நடித்திருந்த ஆஹா கல்யாணம் தொடரின் ஒரு பகுதி ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை புடைத்திருந்தது.இதனை முன்னிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஷூட்டிங் வீடியோ ஒன்றை பகிர்ந்திருடன்ஹார் பிரிகிடா,அதில் காரில் விஜயின் வெறித்தனம் பாடலுக்கு லைட்டாக ஆடியபடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.