சென்னையில் மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 3 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அயனாவரம் பகுதியில் மன நலம் சற்று பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். 

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி இரவு, அந்த சிறுமி வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே உள்ளார். 

இதனையடுத்து, மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். சிறுமி எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், இது குறித்து சிறுமியின் உறவினர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடி வந்தனர். 

இதனை அடுத்து, மன நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அதனைப் பார்த்த வெங்கடேசன் என்பவர், சிறுமிக்கு பிடித்ததை வாங்கி தந்து, “நான் உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை திருத்தணியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற பிறகு, “உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று ஆசை வார்த்தைகள் கூறியும், மிரட்டியும் சிறுமியை தன் வீட்டில் கடந்த 3 மாத காலமாக அடைத்து வைத்துள்ளார். அத்துடன், கடந்த 3 மாத காலமாகச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, வெங்கடேசன் வேலை நிமித்தமாக ஆந்திராவிற்குச் செல்ல இருந்ததால், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை, அவரது வீட்டுக்குச் செல்லும் படி கூறி விட்டு, அந்த சிறுமியை வெங்கடேசனின் அனுப்பி வைத்துள்ளார். 

அதன் பிறகு, சிறுமி வெளியே சுற்றியதைக் கண்ட வேற ஒருவர், சிறுமியிடம் ஆசை ஆசையாகப் பேசி, அவருக்குப் பிடித்த சாப்பாடு மற்றும் தின் பண்டங்களை வாங்கித் தந்து, அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருந்தார். 

எனினும், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கு இருக்கப் பிடிக்காமல், மீண்டும் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். அதன் தொடர்ச்சியாகக் கடந்த 6 ஆம் தேதி, திருத்தணி ரயில் நிலையத்தில் அந்த சிறுமி அங்கும், இங்குத்தாக சுற்றிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த ரயில்வே காவல் துறையினர், சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமி சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. 

இதனையடுத்து சென்னை அயனாவரம் போலீசாரை தொடர்புகொண்டு, சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். அதன் பிறகே, மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, பாட்டியிடம் அனுப்பி வைக்கப்பட்டார். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தி, சிறுமியை கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேசன் பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். அத்துடன், மீண்டும் அடைக்கலம் கொடுத்த மற்றொரு நபர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனையடுத்து, வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குறிப்பாக, அந்த ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் குறிப்பிட்ட தேதியில் பதிவான காட்சிகளைக் கொண்டும், போலீசார் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை, வீட்டில் அடைத்து வைத்துக் கடந்த 3 மாதம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை, அதுவும் மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியைக் கூட விட்டு வைக்காத சில காம மிருகங்களை என்னவென்று சொல்வது?