பாலாஜி மோகன் இயக்கிய வாயை மூடி பேசவும் எனும் தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் துல்கருக்கென தனி இடமுண்டு. உச்ச நட்சத்திரமான மம்முட்டியின் மகனாக இருந்தாலும், துல்கரின் இந்த திரை வளர்ச்சிக்கு அவர் தான் காரணம். 

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இது துல்கரின் 25-வது படமாகும். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். மசாலா கஃபே இசையமைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் துல்கரின் நண்பராக நடித்திருந்தார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்தது. படத்தில் கெளதம் மேனன் சிறப்பான பாத்திரத்தில் நடித்திருந்தார். 

சமீபத்தில் இப்படம் தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய TRPயை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு வெளியான பல படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படமாகும்.

துல்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குரூப். இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகியிருக்கிறது. 

ரெட்ரோ லுக்கில் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் குரூப்பாக காட்சியளிக்கிறார் துல்கர். தப்பிப் பிழைத்த பிரபலம் அல்லாத சுகுமார் குரூப்பின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் M ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்து வருகிறார். 

அடுத்ததாக பிருந்தா மாஸ்டர் இயக்கவிருக்கும் ஹே சினாமிகா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர். அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.