ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன். நடிகராக கால்பதித்தவர் இசையமைப்பாளராக ஜொலித்தார். தில்லாலங்கடி, ஈரம், மாஸ்கோவின் காவிரி, காஞ்சனா, ஒஸ்தி, சேட்டை என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தார். தமிழ் அல்லாது பிற மொழி படங்களுக்கும் இசையமைத்த தமன், தெலுங்கில் உச்சத்தை தொட்டார். அலவைகுந்தபுரமுலோ மற்றும் டிஸ்கோ ராஜா படங்களில் பட்டையை கிளப்பினார். 

தற்போது விஜய் நடிக்கும் தளபதி 65 திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். ஸ்கிரிப்ட் பணிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள முருகதாஸ், ஊரடங்கு முழுமையாக முடிந்த பிறகே படப்பிடிப்பு மற்றும் பிற வேலைகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. 

தளபதி விஜய்யின் பிறந்தநாளில் வாழ்த்து கூறியவர், பாடல் குறித்த ஹின்ட்டையும் தந்தார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா, நம்ம சாங்கிற்காக வெயிட்டிங் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு. 

தற்போது தமன் தனது வீட்டில் உள்ள ஸ்போர்ட்ஸ் ரூமில் கிரிக்கெட் பேட்டுகளை வரிசைப்படுத்தி வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை அசத்தி வருகிறது. இந்த பதிவின் கீழ் தளபதி ரசிகர்கள் பாடல்கள் ரெடியா ? என்று கேட்டு வருகின்றனர். 

சமீபத்தில் மிஸ் இந்தியா படத்தின் பின்னணி இசை பணிகளை துவங்கியதாக கூறியுள்ளார். ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஹோம்லியாகவும், மார்டனாகவும் தோன்றியுள்ளார் கீர்த்தி. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். மிஸ் இந்தியா டீஸர் மற்றும் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக தான் தனது உடல் எடையை கீர்த்தி குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.