பேஸ்புக் காதலனை நம்பிச் சென்ற 15 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்த கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நவீன தொழிற்நுட்ப வளர்ச்சியைக் கண்டுள்ள இந்த உலகம் தற்போது முகத்தைப் பார்த்துப் பேசுவதைக் காட்டிலும் முகநூலில் பேசுவதையே அதிகம் விரும்புகிறது. நன்கு தெரிந்த பழக்கமானவர்களே துரோகம் செய்துவிட்டுச் செல்லும் இன்றைய சமூகத்தில், முகம் தெரியாத முகநூல் நண்பர்களை நல்லவன் என்று நம்புவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இதற்குச் சாட்சி சொல்லும் வகையில் திருவண்ணாமலை அருகே ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கம்பன் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இலியாஸ் என்ற இளைஞர் முகநூல் மூலம் அறிமுகம் ஆகி உள்ளார். இதனால், அவர்களுக்குள் முதலில் நட்பு மலர்ந்துள்ளது. நாளடைவில், அது அவர்களுக்குள் காதலாக மலர்ந்துள்ளது. இது தான் முகநூல் காதல் என்பார்கள்.

நீண்ட நாட்களாக இருவரும் முகத்தைப் பார்க்காமல் முகநூலில் மட்டுமே காதல் வளர்த்து வந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி சந்திக்க வேண்டும் என்று, இலியாஸ் அந்த 15 வயது சிறுமிக்கு குறுஞ் செய்தி அனுப்பி உள்ளார். மேலும், அந்த சிறுமியிடம் தந்திரமாகப் பேசி வந்தவாசி புறவழிச் சாலையில் உள்ள ஒரு சவுக்குத் தோப்புக்குத் தனியாக வரவழைத்து உள்ளான்.

அந்த 15 வயது சிறுமியும் இலியாசை நம்பி அந்த சவுக்கு தோப்புக்கு வந்துள்ளார். அங்குச் சென்றதும் தனது நண்பர் பர்கத், சூர்யா ஆகியோரை இலியாஸ் அந்த சவுக்குத் தோப்புக்கு வரவழைத்துள்ளார். இதனையடுத்து, 3 பேரும் கூட்டாகச் சேர்ந்து அந்த 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆசைத் தீர பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, சிறுமியை சவுக்குத் தோப்பில் விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

இதனால், கடும் வலியுடன் அழுதுகொண்டே அங்கிருந்து சிறுமி எப்படியோ வீடு திரும்பி உள்ளார். சிறுமியின் இந்த நிலையைப் பார்த்து கடம் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, தனது முகநூல் காதல் குறித்தும், அந்த காதலன் குறித்தும், சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை உடனடியாக வந்தவாசி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குச் சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை தொடங்கினர். அத்துடன், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் பிற போலீசார் சம்பவ இடமான சவுக்கு தோப்புக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலியாஸ், பர்கத், சூர்யா ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு, அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முகம் தெரியாத முகநூல் காதல் குறித்தும், சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகம் ஆகும் நபர்களால் அன்றாடம் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பங்கள் தொடர்பாகப் பலவிதமான செய்திகள் தொடர்ந்து வெளிவந்தும், இன்னும் நம்ம ஊர் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தான் வேதனையான ஒன்றாக இருக்கிறது.

இதனிடையே, பேஸ்புக் காதலனை நம்பிச் சென்ற 15 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்த கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.