செல்லம்மா பாடல் செய்த டக்கரான சாதனை !
By | Galatta | December 11, 2020 19:00 PM IST
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார்இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டன.டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.கொரோனவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தீபாவளியன்று அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பாடல் சமீபத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பாடலாக ஒரு சாதனையை நிகழ்த்தியது.தற்போது 1 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை செய்யும் இரண்டாவது சிவகார்த்திகேயன் பாடல் என்ற மாபெரும் பெருமையை பெற்றுள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
#1MLikesForChellamma - Oru million LIKES alli kotti irukkeenga chellangalaa ❤️#Chellamma #Doctor @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl @priyankaamohan @KalaiArasu_ @KVijayKartik @nirmalcuts @DoneChannel1 @proyuvraaj @sonymusicsouth @gobeatroute pic.twitter.com/ESsKWDIN5B
— KJR Studios (@kjr_studios) December 11, 2020
Atharvaa's Kuruthi Aattam Official TEASER | Priya Bhavanishankar | Yuvan
11/12/2020 06:00 PM
Madhavan's next is a BIOPIC of this famous personality? - Maddy clarifies!
11/12/2020 05:29 PM
Simran onboard for Andhadhun Tamil remake | Prashanth | Classic combo returns!
11/12/2020 04:29 PM
Balaji confesses his mistake and wins hearts | exciting Bigg Boss 4 promo
11/12/2020 03:09 PM