ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் டேவிட் வார்னர். கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரபல இந்தி பாடல்களுக்கு மகள்கள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து இவர் நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் தாறுமாறு வைரலானது. ஐபிஎல் போட்டியின் போது ஐதராபாத் அணிக்கு கேப்டனாக விளையாடி வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடியும், பாகுபலி பட வசனங்களை பேசியும் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. 

இந்தி, தெலுங்கு ஹீரோக்களின் முகத்திற்கு பதிலாக ஃபேஸ் ஆப் மூலமாக தன்னுடைய முகத்தை வைத்து வார்னர் வெளியிடும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகவே வார்னர் மாறி வார்னர் வெளியிட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியது.

சமீபத்தில் தளபதி விஜய்யாக மாறி கலக்கியிருந்தார் வார்னர். மாஸ்டர், சர்க்கார், என தளபதியின் தரமான படங்களில் உள்ள, சூப்பர் ஹிட் சீன்களில் வார்னர் தளபதி விஜய்யாக மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன்று ஃபேஸ் ஆப் மூலமாக தன்னுடைய முகத்தை வைத்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் வார்னர். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தின் காட்சிகளை இதில் சேர்த்து வைத்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே, ரசிகர்கள் மத்தியில் வார்னரின் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோவிற்கும் எக்க சக்க லைக்குகள் குவிந்து வருகிறது.

நீங்க நடிக்கவே வரலாமே என்று வார்னரை அழைத்து வருகின்றனர் திரை ரசிகர்கள். சமீப காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் வார்னரும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)