தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.அப்படி விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலன்களாக மாறியுள்ளனர்.

புகழ்,பாலா,ஷிவாங்கி உள்ளிட்டோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நட்சத்திர அந்தஸ்தை எட்டி விட்டனர்.முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை விஜய் டிவி தொடங்கினர்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை விட இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி இந்த வாரம் நடைபெறவுள்ளது,அஸ்வின்,கனி,பாபா பாஸ்கர்,ஷகீலா நால்வரும் பைனலுக்கு முன்னேறி அசதியுள்ளனர்.இந்த இறுதி போட்டிக்கான ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது இது குறித்து போட்டியாளர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஏப்ரல் 14ஆம் தேதி இந்த இறுதி போட்டி ஒளிபரப்பாகவுள்ளது என்று ஐந்து மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தகவல் கிடைத்திருந்தது.இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அஸ்வின்,சக்தி,புகழ்,ரக்ஷன் உள்ளிட்டோர் அஸ்வினின் சமீபத்திய சூப்பர்ஹிட் பாடலான குட்டி பட்டாஸ் பாடலுக்கு நடனமாடி அசதியுள்ளனர்.

View this post on Instagram

A post shared by sakthi (@sakthii___)