பிக்பாஸ் வீட்டின் நட்சத்திர போட்டியாளர்களான ஆரி மற்றும் பாலாஜி இடையே தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். குறிப்பாக அவர்கள் எதாவது காரணங்களை காட்டி தினம்தோறும் சண்டை போடுவது பிக் பாஸ் ரசிகர்களுக்கு தனி விருந்தாகும். அவர்களின் வாக்குவாதத்தை பார்க்கும்போது இது அடிதடி சண்டையாக மாறிவிடுமோ என்கிற அச்சமும் பலருக்கும் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. 

நேற்று பிக் பாஸ் வீட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் பாலாஜியும் பங்கேற்றார். அதில் பாலாஜி வெளியில் அடிக்கும் cubeகள் எத்தனை என்பதை ஆரி தான் எண்ணிக்கொண்டிருந்தார். இறுதியில் ஆரி தப்பாக நெகடிவ் மார்க் கொடுக்கிறார் என கூறி பாலாஜி சண்டை போட்டார். ஆனால் உண்மையில் பாலாஜி மீது தான் தவறு என பார்க்கும் அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் ஆரி கால் சென்டர் ஊழியராக இருக்க பாலாஜி போன் செய்து அவரை கேள்வி கேட்டு தொலைத்தெடுத்திருப்பது போன்று இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. நான் உங்களுக்கு பெரிய ஃபேன், ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே என பேச தொடங்கும் பாலாஜி அதன் பின் ஆரியை தாக்கி பேச ஆரம்பிக்கிறார்.

நான் யாரையும் காலி பண்ணி விளையாடமாட்டேன்.. ஒண்ணா வாங்க சேர்ந்து விளையாடலாம்.. அது தான் என் மெட்டாலிட்டி என அடிக்கடி நீங்கள் சொல்கிறீர்கள் என்று ஆரியை தாக்கி கேள்விகளை அடுக்கினார். இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், பாலாஜிக்கு என்ன பதில் தருகிறார் ஆரி என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

இந்த முறை இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்குமா என்றும் ஹவுஸ்மேட்ஸ் காத்துக்கொண்டு இருக்கின்றனர். நிஷா மற்றும் அர்ச்சனா இருவரும் இணைந்து பாலாஜிக்கு யோசனை கூறுவது போல் தெரிகிறது. மறுபுறம் சனம் மற்றும் ஆஜீத்திடம் நடந்ததை விளக்குகிறார் ஆரி. இன்னும் இந்த கால் சென்டர் டாஸ்க்கில் சோம் சேகர், ரம்யா பாண்டியன், ரியோ ஆகியோர் ஊழியர்களாக அவதாரம் எடுக்கவில்லை. அடுத்து வரும் ப்ரோமோவில் இடம் பெறலாம் என்ற ஆவலில் உள்ளனர் பிக்பாஸ் பிரியர்கள்.