பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 59-வது நாளை எட்டியுள்ளது. டாஸ்க்கில் சுவாரஸ்யம் இருந்தாலும், அதை போட்டியாளர்கள் சந்திக்கும் விதம் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர்கள் தங்களது கேம்மில் கூடுதலாக கவனம் செலுத்தி வருவதை காண முடிகிறது. 

கடந்த சில நாட்களில் ரம்யா பாண்டியன் மற்றும் சோம் இடையே ஒரு புதிய லவ் ட்ராக் இருப்பது போல காட்டப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். ரம்யா கொடுத்த சாக்லேட்டை சோம் இன்னும் பிரிக்காமல் வைத்திருக்கிறார். அதை கேபி இன்று கலாய்த்தார். தனக்கு அப்படி எந்த பீலிங்ஸும் இல்லை என விளக்கம் கொடுத்தார் சோம். ரம்யா இன்று பூ போட்ட டிரஸ் அணிந்திருக்கும் நிலையில், நீயும் பூ போட்ட சட்டை போட்டு ட்ரை பண்ணு என கூறி கிண்டல் செய்தார்.

ஜித்தன் ரமேஸ் இந்த வாரத்திற்கான அணியை பிரித்த போது பாலாஜியை Vice -கேப்டன் என அறிவித்தார். ஆனால் அதில் தனக்கு விருப்பம் இல்லை என கூறி மறுத்துவிட்டார். எனக்கு விருப்பம் இல்லை, வேண்டுமானால் அதை காரணமாக சொல்லி நாமினேட் செய்து கொள்ளுங்கள் என அனைவர் முன்பும் கூறினார், 

இந்த வார நாமினேஷன் அடுத்து தொடங்கியது. இதில் பெரும்பாலானோர் ஷிவானியை நாமினேட் செய்தனர். அவர் பாலாஜி shadow-வில் தான் இருக்கிறார் என ஷிவானி மீது குற்றச்சாட்டு வைத்தார். மேலும் ஆஜித், ஆரி, ரம்யா உள்ளிட்டவர்க்ளை பலரும் நாமினேட் செய்தனர். ஆரியை கோபம் காரணாமாகவும் ஒரு சிலர் நாமினேட் செய்தனர். இறுதியில் நாமினேஷன் லிஸ்டை பிக் பாஸ் காரணத்துடன் அறிவித்தார். பாலாவின் ஷேடோவில் தான் இருக்காங்க, ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தோம்னு மறந்துட்டாங்க, சிரித்துக்கொண்டே hurt செய்கிறார் போன்ற காரணங்களை கூறி நாமினேட் செய்யப்பட்ட நபர்கள் குறித்து போட்டுடைத்தார் பிக்பாஸ். 

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஆரியை தனது கேள்வியால் மடக்கியுள்ளார் பாலாஜி. முதலில் நான் உங்கள் ரசிகன்... ஆனால் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே என்று கூறினார். பின் நீங்க யாரையும் காலி பண்ணி விளையாட வேண்டும் என்று நினைக்க வில்லையா ? என்ற கேள்வியை முன்வைத்தார். அதன் பின் வசூல் ராஜா MBBS திரைப்பட பாணியில் ஒரு பஞ்ச் சொல்கிறார். கெட்டவனு சொல்றான் பாருங்க அவன நம்பலாம், நல்லவனு சொல்றான் பாருங்க அவனையும் நம்பலாம்... ஆனால் நான் மட்டும் தான் நல்லவனு சொல்றான் பாருங்க அவன நம்பவே கூடாது என்று பேசியுள்ளார்.