விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்ட போதும் இந்த தொடர் மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பட்டது.அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் பாரதி கண்ணம்மா தொடர் ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளது.

இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடர் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.தொடரின் புதிய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வரும் இந்த தொடர் TRP-யில் சாதனை படைத்தது .அதிகம் பார்க்கப்பட்ட தொடராக சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் இருந்தது.

இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.தற்போதும் இந்த தொடருக்கான மவுசு குறையாமல் தொடர்ந்து TRP-யில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துவிடும்.நேற்று இந்த தொடரின் நாயகன் அருண் மற்றும் நாயகி ரோஷ்ணி இருவரின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் இருவரும் சேர்ந்து கேக் வெட்டி கொள்ளும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.