இந்திய திரையுலகின் ரசிகர்களின் நாடியறிந்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இசையமைப்பாளர் அனிருத். பாடல்களில் கேமியோ, கான்செர்ட் மேடைகளில் நடனம் என ஜொலித்து கொண்டிருப்பதால் ராக்ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுகிறார். 2012-ம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் அறிமுகமானவர், இன்று பிஸியான இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்த பெருமையையும் பெற்றுள்ளார். 

Anirudh Plays Shah Rukh Khans Kal Ho Naa Ho Tune

இந்நிலையில் அனிருத் தனது ஸ்டுடியோவில், ஷாருக்கான் நடித்த கல் ஹோ நா ஹோ திரைப்படத்தின் பாடலை வாசித்து இணையதள ரசிகர்களை ஈர்த்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ரொமான்டிக் காமெடியான கல் ஹோ நா ஹோ திரைப்படம் இன்று வரை 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டாக உள்ளது. தற்போது அனிருத் வாசித்த இந்த பாடல் அதிக லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது. 

Anirudh Plays Shah Rukh Khans Kal Ho Naa Ho Tune

அனிருத் இசையில் மாஸ்டர் திரைப்பட பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தியன் 2, டாக்டர், சியான் 60 போன்ற படங்கள் அனிருத் கைவசம் உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

One of my all time favourite pieces..

A post shared by Anirudh (@anirudhofficial) on