போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இயக்குனர் H வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் தல அஜித். ஷூட்டிங்கில் பங்கேற்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

கொரோனா நேரத்தில் அரசுக்கு உதவி செய்யும் நோக்கில், தமிழ்நாட்டில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை தெளிக்கும் பணியில் தக்ஷா குழுவுடன் இணைந்துள்ளார் அஜித். 

இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், தல தோனி என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வந்தன. இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் ரசிகர்கள், யார் ரியல் தல என்பதை முடிவு கட்டவேண்டும் என நினைத்து, #RealBrandTHALAAjith என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தோனி ரசிகர்களுடன் ஆன்லைன் போர் புரிந்து வருகின்றனர்.

வழக்கமாக தல-தளபதி ரசிகர்களுக்கு இடையே சண்டை எழுந்து வந்த நிலையில், தற்போது வித்தியாசமாக கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் சண்டை எழுந்துள்ளது. காலை முதலே தோனியின் பிறந்தநாள் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது, #RealBrandTHALAAjith என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். 

இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், தோனி ரசிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் விதமாகவும், அஜித் ரசிகர்களுடன் மோதும் சாக்கிலும் தளபதி ரசிகர்களும் தல தோனி தான் என கமெண்ட் செய்து வருவதாக நெட்டிசன்கள் குமுறுகின்றனர். எதுவாக இருந்தாலும் இரண்டு பேருமே தங்களது துறையில் கடின உழைப்போடும், ரசிகர்களின் ஆதரவோடும் சுயம்பாக உருவானவர்கள் என்பது நினைவில் இருக்கட்டும். 

நடிகர் அஜித்குமார் தனது ரசிகர் மன்றங்களை களைத்தாலும், நாளுக்கு நாள் அவரது ரசிகர்கள் அதிகமாக தான் இருக்கிறார்கள். பல நாட்கள் விளையாடாமல் இருந்தாலும் தோனியை பற்றி தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படிஇருக்க சண்டை எதற்கு ? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் நியூட்ரல் ஃபேன்ஸ்.