கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 30 அமல்படுத்தப்படவுள்ளது.இதற்கு முந்தைய ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள், சின்னத்திரை சீரியல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் பாதுகாப்பு உபகாரங்களோடும்,குறிப்பிட்ட அளவுடைய ஆட்களோடும் நடத்த அனுமதித்திருந்தனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டு சினிமா,சின்னத்திரை,சீரியல் வேலைகள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.ஜூலை 5 வரை இந்த தீவிர ஊரடங்கு தொடரும் என்றும் அரசு அறிவித்துள்ளனர்.ஜூலை 6ஆம் தேதி முதல் கடந்தமுறை அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று முதல் தீவிர ஊரடங்கு நிறைவடைந்து நிறைவடைந்து பழைய தளர்வுகள் அமலுக்கு வந்தது.இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி சின்னத்திரை,வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றின் ஷூட்டிங் நாளை ஜூலை 8ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்று அறிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து ஷூட்டிங்கை நடத்த அனைத்து சீரியல் குழுவினர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.புதிய எபிசோடுகள் விரைவில் ஒளிபரப்பப்படும் என்ற ஆனந்தத்தில் சீரியல் ரசிகர்கள் உள்ளனர்.