இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் அட்லீ.ராஜா ராணி படத்தின் மூலம் ரொமான்டிக் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.முதல் படமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயுடன் இணைந்து தெறி படத்தின் மூலம் மாஸ் டைரக்டர் ஆக உயர்ந்தார்.

2016-ல் அட்லீயின் புத்துணர்ச்சியோடு விஜயின் வேகமும் இணைந்துகொள்ள படம் பட்டிதொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டியது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மீண்டும் அட்லீ தளபதி விஜயுடன் கூட்டணி அமைத்தார்.தீபாவளி ரிலீஸ்.மூன்று வேடங்களில் விஜய்.ஏ.ஆர்.ரஹ்மான் என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து வர இந்த படம் பிற படங்களின் ரெகார்ட்களை உடைத்தெறிந்து விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.இந்த படத்தின் வெற்றி அட்லீயை முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அமர்த்தியது.

தெறி,மெர்சல் என்று இரு வெற்றி படங்களை கொடுத்திருந்த அட்லீ.மூன்றாவது முறையாக விஜயுடன் இணைந்தார்.இம்முறை புட்பால்,வயதான தோற்றத்தில் விஜய் என்று தன்னால் முடிந்த புதுமைகளை புகுத்தினார் அட்லீ.2019 தீபாவளிக்கு வெளியான இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று,அந்த ஆண்டின் அதிகம் வசூல் செய்த படமாக இருக்கிறது.கமர்சியல் மாஸ் மசாலா டைரக்டர் ஆக அட்லீ வளந்துள்ளார்.

இதனை அடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார் என்ற தகவல் என்றும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.கொரோனா காரணமாக இந்த படத்தின் அறிவிப்பு தள்ளிப்போயுள்ளது என்று தெரிகிறது.இவர் தயாரித்துள்ள அந்தகாரம் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.மெர்சல்,பிகில் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ஜி.கே.விஷ்ணு.இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.தன்னுடைய இன்னொரு கண்ணாக இருக்கும் விஷ்ணுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy b day my second eye @gkvishnu_dop love u god bless da

A post shared by Atlee (@atlee47) on