தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்றுக்கொண்டு இருகின்றன. இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் மதுரை வர வேண்டும் என மு.க.அழகிரி தெரிவித்து இருக்கிறார்.


 அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவேன்.  ஆதரவாளர்கள் சொன்னால் கட்சி தொடங்குவேன். திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. திமுக தலைமையிடம் இருந்து இந்த அழைப்பும் வரவில்லை” என்று முன்னர் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனை கூட்டம் 03/01/2021 ஞாயிற்றுக்கிழமை  மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.