தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ரெஜினா.கடைசியாக தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.பார்ட்டி,நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sam CS On Board For Regina Caarthick Raju

அருண் விஜய் நடிக்கும் AV 31,விஷால் நடிக்கும் சக்ரா,கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தைதிருடன் போலீஸ்,உள்குத்து,கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்குகிறார்.

Sam CS On Board For Regina Caarthick Raju

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக விக்ரம் வேதா,கைதி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த அறிவிப்பை படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Sam CS On Board For Regina Caarthick Raju