பூஜையுடன் தொடங்கியது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாவின் லால் சலாம் படம் !
By Aravind Selvam | Galatta | November 05, 2022 16:34 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.50 வருடங்களுக்கும் மேலாக தனது படங்கள் மூலம் ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.இவரது திரைப்படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும்.பல வருடங்கள் நடித்து வந்தாலும் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக இவரது பட வசூல்கள் இருக்கும்.
தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் 2021 தீபாவளிக்கு திரைக்கு வந்து சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.இந்த படத்தினை தொடர்ந்து இன்னும் சில படங்கள் ரஜினிகாந்த் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை டாக்டர்,பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்று வருகிறார் ரஜினி.
தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் லால் சலாம் என்ற படத்தில் சூப்பர்ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.இந்த படத்தினை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் இன்று காலை வெளியானது.இந்த போஸ்டர் மூலம் கிரிக்கெட்டை மையப்படுத்தப்பட்ட படம் என்று தெரியவந்துள்ளது.இந்த படத்தின் பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Stills 📸 from #LalSalaam 🫡 movie pooja 🌸 happened today at Chennai 📍@rajinikanth #Subaskaran @arrahman @ash_rajinikanth @TheVishnuVishal @vikranth_offl @gkmtamilkumaran @RIAZtheboss pic.twitter.com/pvXMJLyWbk
— Lyca Productions (@LycaProductions) November 5, 2022
Stills 📸 from #LalSalaam 🫡 movie pooja 🌸 happened today at Chennai 📍@rajinikanth #Subaskaran @arrahman @ash_rajinikanth @TheVishnuVishal @vikranth_offl @gkmtamilkumaran @RIAZtheboss pic.twitter.com/MemPL0TXcn
— Lyca Productions (@LycaProductions) November 5, 2022
Stills 📸 from #LalSalaam 🫡 movie pooja 🌸 happened today at Chennai 📍@rajinikanth #Subaskaran @arrahman @ash_rajinikanth @TheVishnuVishal @vikranth_offl @gkmtamilkumaran @RIAZtheboss pic.twitter.com/G4HlNpxfuS
— Lyca Productions (@LycaProductions) November 5, 2022