இன்னைக்கு தான் எனக்கு தீபாவளி...வாரிசு இசையமைப்பாளர் தமன் லேட்டஸ்ட் பதிவு !
By Aravind Selvam | Galatta | November 05, 2022 15:27 PM IST

பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இசை மீது கொண்ட ஆர்வத்தினால் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர் தமன்.தமிழ்,தெலுங்கு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தெலுங்கில் இவர் இசையமைக்கும் படங்கள் பெரிய வரவேற்பை பெறும்.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இவரது பாடல்கள் செம ஹிட் அடித்து மில்லியன்,பில்லியன் என பார்வையாளர்களை அள்ளி வருகிறது.இவர் இசையமைத்த சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படம் சமீபத்தில் வெளியானது.
அடுத்ததாக தளபதி விஜயின் வாரிசு,மகேஷ் பாபுவின் SSMB 28 என பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் தமன் அவ்வப்போது சில தகவல்களையும் பகிர்ந்து வருவார்.தளபதி விஜயின் வாரிசு படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.
தமன் விஜயின் பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அவர் இசையில் விஜய் முதல்முறையாக பாடிய பாடல் வெளியாவது தான் தனக்கு தீபாவளி என்றும் பாடல் ரிலீஸை ரசிகர்களுடன் கொண்டாட காத்திருப்பதாகவும், விஜயுடன் வாரிசு ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் !! 🔥
— thaman S (@MusicThaman) November 4, 2022
With Anna @actorvijay 🖤#Ranjithame 🎧♥️💃#VarisufirstSingle 🔊 pic.twitter.com/ne2v2tFSXM