ஷாருக்கான் இந்திய சினிமாவை  எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக அவதரித்தார்.உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமையை பெற்றவர் இவர்.அடுத்ததாக பதான்,அட்லீயின் ஜவான் உள்ளிட்ட படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் ஷாருக் கான்.

அதேபோல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து தனக்கென ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இந்தியா சினிமாவில் முக்கிய பாக்ஸ் ஆபிஸ் நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.

விஜய் மற்றும் ஷாருக் கான் இருவரும் சில தருணங்களில் சந்தித்துள்ளனர்.ஒரு விருது விழாவில் விஜய் மற்றும் ஷாருக் கான் இணைந்து நடனமாடியது , அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட சில இடங்களில் இருந்துள்ளனர்.இதனை தவிர வாரிசு மற்றும் ஜவான் படங்களின் ஷூட்டிங்கிற்கு இடையே இருவரும் சந்தித்துள்ளனர்.இதனை தவிர ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் வலம் வந்துகொண்டிருக்கிறது.

இன்று ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஷாருக் கான்.விஜய் குறித்தும் அவருடன் இணைந்து நடிப்பது குறித்தும் ஒரு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.விஜய் மிகவும் அமைதியான மனிதர்,அவருடன் நடிக்கும் படி ஒரு ஸ்கிரிப்ட் அமைய வேண்டும் அப்படி அமைந்தால் நிச்சயம் இருவரும் சேர்ந்து நடிப்போம் என தெரிவித்துள்ளார்.