வைரலாகும் பத்துதல படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | November 05, 2022 14:22 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு படம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
பத்து தல படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இந்த படத்தில் மற்றுமொரு நாயகனாக கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார்.
ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சில வாரங்களில் இந்த படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பாக்கப்படுகிறது.இந்த படப்பிடிப்பில் இருந்து கெளதம் கார்த்திக் சிம்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
I've never met a more genuine human being in my life. Sincere about his craft! Impressively creative at work and more importantly, unafraid to show how he truly feels.
— Gautham Karthik (@Gautham_Karthik) November 4, 2022
Truly a pleasure working @SilambarasanTR_ annan! 😊#PathuThala pic.twitter.com/oaoKEWI00U