பெண்களுக்கு ஃபைப்ராய்ட்ஸ் கட்டிகள் எப்படி உருவாகிறது?
By Abinaya | Galatta | Dec 24, 2020, 07:52 pm
ஃபைப்ராய்ட்ஸ், மயோமா.. இவை இரண்டுமே ஒன்று தான். கர்ப்பப்பை கட்டி! ஃபைப்ராய்ட்ஸ் வயது பேதமும் பார்ப்பதில்லை. இளவயது பெண்கள் முதல் மெனோபாஸ் கட்டத்தில் இருக்கும் பெண்கள் வரை எல்லாருக்கும் இந்த பிரச்சனை ஏற்படும். குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனை ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
ஃபைப்ராய்ட்ஸ் கட்டி எப்படி உருவாகும்?
கர்ப்பப்பையின் உள்சுவரில் இருந்து தான் மாதவிடாய் ரத்தப்போக்கு வெளி வரும்.மாதவிடாய் காலம் முடிந்ததும், உதிர்ந்த உள்சுவரானது, புதிதாக வளர ஆரம்பிக்கும். ஆனால் 75 சதவிகித உள்சுவர் லேயர் உதிர்ந்து, 25 சதவிகிதம் அங்கேயே தங்கினால் அது ’எண்டோமெட்ரியோசிஸ்’ எனப்படும். இப்படி மிச்சமிருக்கிற ரத்தத்தில் இன்ஃபெக் ஷன் உண்டாகி, வீங்கி, அதுவே ஃபைப்ராய்ட்ஸ் என்ற கட்டிகளாக மாறுகிறது.
அறிகுறிகள்?
மாதவிடாய் நாள்களில் மிகக்கடுமையான வலியும், வழக்கத்தைவிட அதிகமான ரத்தப்போக்கும் தான் முக்கிய அறிகுறிகள். வழக்கத்துக்கு மாறாக வலி இருக்கும்போதே ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கட்டியின் அளவு 10 செ.மீ-க்குள் இருந்தால், அதை லேப்ராஸ்கோப்பி என்ற சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். அதைவிடப் பெரிய கட்டி இருந்தால் அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
நல்ல உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்கம் தான், மருத்துவர்கள் தரப்பில் இருந்து இந்த பிரச்சனைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொல்லப்படுகிறது.