மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளின் தொகுப்பு தானே? ஒவ்வொரு  நாளும் அமைதியாக , சந்தோசமாக அமைய வேண்டும் என்பது தானே அனைவரின் ஆசையாக இருக்கும். புறகாரணங்கள் தவிர்த்து நாம் எப்படி ஒருநாளை தொடங்குகிறோம் , செதுக்கிக் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது மகிழ்ச்சியான வாழ்வின் சூட்சமம்.
ஒரு நாளை எப்படி எல்லாம் அமைதியாக மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு சில டிப்ஸ்.. 


முதலில் உடற்பயிற்சி.. காலையில் யோகா,  உடற்பயிற்சி அல்லது குறைந்தபட்சம் மூச்சு பயிற்சியாவது செய்து ஒரு நாளை தொடங்கினால், அந்த நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிதானம் மற்றும் மன அமைதி அதிகரிக்கும். 

தினமும் ஒரு காய், பழம், ஒரு கீரை வகை சேர்த்துக்கொள்ளவும். ஏழுநாள் ஏழு விதமான ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்கிறது. இதற்கு பெரிதாக மெனக்கெடலோ, நேரம் ஒதுக்கவோ  தேவை இருக்காது. 


சத்தான உணவு சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதே போல் சாப்பாட்டின் அளவும் முக்கியம். சிறிய தட்டில் சாப்பாட்டு எடுத்துக்கொள்ளும் போது சாப்பாட்டின் அளவு தானாக குறையும். கூடவே நிறைய தண்ணீர் அவசியம்.  தாகம் எடுக்கும் வரை தண்ணீர் குடிக்காமல் இருப்பதை விட்டு,  குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.


நாள் முழுக்க அமர்ந்தே வேளை செய்வோர் மதியம் உணவு இடைவெளிக்கு, இடையில் டீ , காபி போன்ற இடைவெளிக்கு மட்டும் எழுந்திருக்காமல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து சின்ன நடைபயிற்சி செய்யலாம். 


இரவு தூக்கும் முன் நல்ல இசைக்கு நடனம் ஆடலாம். அதற்கு பின் சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். இரவு இப்படி செய்வது மூலம் அந்த நாளின் மன அழுத்தமும் எதிர்மறை எண்ணங்களும் குறையும்.  

இதெல்லாம் செய்ய ஆரம்பிக்கும் போதே உடல் ஆரோக்கியமாகவும் , மன அமைதியாகவும் ஒரு நாள் மகிழ்ச்சியாக அமையும்.