வீட்டை விட்டு ஓடி வந்த திருமணம் ஆன பெண் ஒருவர் 40 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட நிலையில், அவரது 6 வயது பெண் குழந்தை 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாபில் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்ஸா சிங் என்பவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ராஜ்வீர் கவுர் என்பவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த அந்த தம்பதிக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால், 2 பெண் குழந்தைகளுடன் ஜஸ்ஸா சிங் - ராஜ்வீர் கவுர் தம்பதியினர் வசித்து வந்தனர்.

இப்படியான நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது. இப்படியாக, தொடர்ச்சியாக அவர்களுக்குள் பிரச்சனை எழுந்துகொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் இனியும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு எடுத்து, தனியாகப் பிரிந்து சென்றார்.

அப்படி, அவர் கணவனை விட்டு தனியாகப் பிரிந்து செல்லும் போது, தனது இரு பெண் பிள்ளைகளில் 6 வயது பெண் பிள்ளையை மட்டும் அவர் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

இந்த நிலையில், 6 வயது சிறுமியுடன் வீட்டை விட்டுச் சென்ற பெண் சாப்பிட்டேிற்கே சிரமப்பட்டு வந்ததைப் பார்த்த ஒருவர், அந்த பெண்ணை காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்து, தன்னுடன் கூட்டிச் சென்று உள்ளார். 

அதன் பிறகு, அங்குள்ள மதுராவின் ஃபரா பகுதியில் வசிக்கும் ராஜ்வீர் கவுர் என்கிற ஒருவருக்கு, அந்த பெண்ணை சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார். 

அதன் தொடர்ச்சியாக, பணத்திற்கு விற்கப்பட்ட அந்த பெண், தனது 6 வயது மகளுடன் இருப்பதைப் பார்த்த பணத்திற்கு வாங்கிய ராஜ்வீர் கவுர், அந்த  பெண்ணின் 6 வயது சிறுமியை ஏமாற்றி கூட்டிச் சென்று வெறும் 500 ரூபாய்க்கு மற்றொரு நபரிடம் விற்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து ராஜ்வீர் கவுரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். 

அப்போது, “உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்” என்று, ராஜ்வீர் கவுர் கூறிவிட்டு அங்கிருந்து சென்ற நிலையில், உடனடியாக அரசு உதவி மையமான 1098 என்ற எண்ணிற்கு அழைத்துப் பேசி அந்த பெண், தனது மகள் விற்கப்பட்டது குறித்தும், தான் விற்கப்பட்டது குறித்தும் புகார் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் சென்ற நிலையில், இது குறித்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 500 ரூபாய்க்கு சிறுமியை வாங்கிய நபரிடமிருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட சிறுமியை, அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

அதன் தொடர்ச்சியாக, 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்த சிறுமியின் தாயாரையும் போலீசார் பத்திரமாக மீட்டு, அவரது கணவனை நேரில் வரவழைத்து, அவருக்கு புத்திமதி கூறி, அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.