ஸ்பெயின் நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு உருவான இந்த MONEY HEIST 5 தொடரை  நெட்பிளிக்ஸ் நிறுவனம் உரிமம் பெற்று தனது OTT தளத்தில் வெளியிட்டது. இதுவரை நான்கு பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் ஒவ்வொரு பாகமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. 

ஒரு அதிபுத்திசாலியான ப்ரொபசர் கொள்ளையடிப்பதற்காக ஒரு அணியை உருவாக்கி ஒரு வங்கியில் கொள்ளை அடிப்பதை மூலக் கதையாக கொண்ட இந்த வெப்சீரிஸ் காட்சிக்கு காட்சி ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான பிரம்மாண்டமும் விறுவிறுப்பும் கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வெறும் வங்கிக் கொள்ளையை மூலகதையாக வைத்து இந்தத் தொடர் நகர்ந்தாலும் காட்சி அமைக்கப்பட்ட விதத்தில் ஒவ்வொரு பிரேமும் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவர்களை பதைபதைக்கச் வைக்கும் விதமாக அமைந்தது. 

இந்த MONEY HEIST ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் தற்போது ஒளிபரப்ப தயாராகியுள்ளது.MONEY HEIST- 5 பற்றிய ரிலீசை அறிவிக்கும் விதமாக ஒரு டீசரையும் வெளியீட்டு எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது. 

ஐந்தாவது சீசனின் முதல் பாகம் செப்டம்பர் 3-ம் தேதியும் இரண்டாம் பாகம் டிசம்பர் 3-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெகு நாட்களாக MONEY HEIST சீசன் 5 காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள  இந்த டீசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பால்  ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் வெப்சீரிஸை எதிர்பார்த்து இருக்கின்றன.