ஆபிஸ்சை சுத்தம் செய்துகொண்டிருந்த அவுஸ் கீப்பிங் பெண்ணை, அதே அலுவலகத்தில் பணியாற்றும் 3 ஊழியர்கள் வெறித்தீர் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள பாவ்நகரில் கும்பராவாட் ஏரியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தனியார் நிறுவனத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் அவுஸ் கீப்பிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். 

அலுவலகம் காலையில் 10 மணிக்கு தொடங்குகிறது என்றால், அந்த பெண் தினமும் அதிகாலை 6 மணிக்கு அந்த அலுவலகத்திற்கு வந்து, சுத்தம் செய்யும், அவுஸ் கீப்பிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். 

இப்படியான நிலையில், அதே அலுவலகத்தில் ஊழியர்களாக பணியாற்றி வந்த கபில் சூடாசாமா, அவரின் நண்பர்களான ராகேஷ் மக்வானா, தினேஷ் மக்வானா ஆகிய 3 பேரும் அந்த 40 வயதான அவுஸ் கீப்பிங் பெண் மீது சபலப்பட்டு உள்ளனர். இதனால், அந்த பெண்ணை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று, அவர்கள் 3 பேருமாகச் சேர்ந்து திட்டம் போட்டு உள்ளனர். 

அதன் படி, சபலப்பட்ட அந்த 3 பேரும், அந்த பெண்ணை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன், அதிகாலை 5 மணிக்கெல்லாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த அலுவலகத்தில் வந்து மறைந்துகொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த அவுஸ் கீப்பிங் பெண், எப்போதும் போல அன்றைய தினமும் காலை 6 மணிக்கு தனது அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய வழக்கமான பணிகளைச் செய்து வந்தார்.

அந்த நேரம் பார்த்து, அந்த அலுவலகத்தில் மறைந்திருந்த அந்த பேரும், அந்த அழுக்கத்தை உள் பக்கமாகப் பூட்டிவிட்டு உள்ளனர். அதன் தொடர்ச்சியாக. அந்த 40 வயதான அவுஸ் கீப்பிங் பெண்ணை, அந்த 3 பேருமாகச் சேர்ந்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

முக்கியமாக, அந்த பெண்ணை அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததை, தங்களது செல்போனில் அவர்கள் வீடியோவும் எடுத்து உள்ளனர். 

அத்துடன், “இது குறித்து வெளியே கூற கூடாது” என்றும், அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர். “அப்படி, மீறி வெளியே கூறினால், உனது இந்த ஆபாசப் படத்தை இணையத்தில் வெளியிட்டு உன்னை இன்னும் அசிங்கப்படுத்தி விடுவோம்” என்றும், அவர்கள் அந்த பெண்ணை பகிரங்கமாக மிரட்டி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இந்த பலாத்கார சம்பவம் குறித்து வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார். 

மேலும், அந்த அலுவலகத்தில் இருந்து அந்த பெண் வேலையை விட்டு நின்று உள்ளார். இதனையடுத்து, அந்த 3 பேரும் அந்த பெண்ணின் ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவானது சம்மந்தப்பட்ட பெண்ணின் கவனத்திற்கும் வந்து உள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த 3 பேர் மீதும் பாலியல் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட தினேஷ் மக்வானா, ராகேஷ் மக்வானா ஆகிய இரு குற்றவாளிகளையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

அத்துடன், தற்போது தலைமறைவாக உள்ள கபில் சூடாசாமாவை கைது செய்ய முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.