பாலுறவுக்கு மறுத்த மனைவியை ஆத்திரத்தில் கொன்ற கணவன், தனது 3 குழந்தைகளை அருகில் உள்ள கால்வாயில் வீசிய சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைத்து உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாசேதி கிராமத்தைச் சேர்ந்த சமார் 38 வயதான பப்பு குமார் என்பவர், தனது மனைவி 36 வயதான டோலி உடன் வசித்து வந்தார்.

இந்த தம்பதிக்கு 5 வயதில் சோனியா, 3 வயதில் வான்ஷ் மற்றும் ஹர்ஷிதா என்கிற 15 மாத குழந்தை என்று 3 குழந்தைகள் இருந்தனர்.

38 வயதான பப்பு குமார் மது போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை நடப்பது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

இப்படியான நிலையில், கணவன் - மனைவி இடையேயான சண்டையில், இருவரும் கடந்த 15 நாட்களாகப் பேசிக்கொள்ளாமல், இருந்து உள்ளனர். முக்கியமாக, கணவருடன் சண்டை போட்டதன் காரணமாக, அவருடைய 36 வயதான மனைவி டோலி, கணவனுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாமல், முற்றிலும் தவிர்த்து வந்தார்.

இதனால், தொடக்கத்தில் கணவன் என்கிற அகந்தையில், மனைவியை அணுகிய இருக்கிறார் பப்பு குமார். ஆனாலும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த அவரது மனைவி டோலி, கணவனின் ஆசைக்கு இறங்கி வர மறுத்து விட்டார்.

இப்படியாக, கணவன் - மனைவி இடையே, கடந்த 15 நாட்களாகத் தாம்பத்திய உறவு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த 15 நாட்களும், அவரது மனைவி டோலி, தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்தார்.

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த கணவன் பப்பு குமார், பாலியல் உருவுக்கு வர மறுத்த காரணத்திற்காக, தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உள்ளார். இதில், துடிதுடித்த அந்த பெண், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது கோபம் துளியும் அடங்காத நிலையில், தன்னுடைய 3 குழந்தைகளையும், வீட்டின் அருகில் இருந்த கால்வாயில் உயிருடன் தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளார். 

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், பதறிப்போய் அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அந்த கிராம மக்கள் சேர்ந்து, கால்வாயில் உயிருடன் தூக்கி எறியப்பட்ட 3 குழந்தைகளையும் தேடிப் பார்த்தனர். ஆனால், எங்கும் தேடியும் அந்த குழந்தைகளையும் மீட்க முடியவில்லை.

அத்துடன், கால்வாயில் உயிருடன் தூக்கி எறிந்துவிட்ட அந்த 3 குழந்தைகளும் இந்நேரம் உயிரிழந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும், கால்வாயில் வீசப்பட்ட குழந்தைகளின் உடல்கள் இதுவரை கிடைக்காததால் போலீஸார் தேடும்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும், கணவனால் சுடப்பட்டு இறந்த மனைவி டோலியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அவரை உடலை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குறிப்பாக, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவியை கொன்ற பப்பு குமாரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அங்குள்ள முசாஃபர் நகரில் கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தாம்பத்திய உறவுக்கு வர மறுத்த காரணத்தால், மனைவியைக் கொன்று விட்டு, தனது 3 குழந்தைகளை உயிருடன் கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.