மலையாளத் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் டொவினோ தாமஸ் மலையாள திரையுலகம் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தவர். நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய டெவினோ தாமஸ் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் மின்னல் முரளி.

சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகியிருக்கும் மின்னல் முரளி திரைப்படத்தில் டொவினோ தாமஸ், மின்னல் முரளி எனும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் மின்னல் முரளி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

மின்னல் முரளி படத்தை இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். வீக் என்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். சமீர் தாஹிர் ஒளிப்பதிவில் ஷான் ரஹ்மான் மற்றும் சுஷில் ஷ்யாம் இணைந்து இசையமைத்துள்ளனர். 

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிற டிசம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக ரிலீஸாகும் நிலையில், மின்னல் முரளி படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. டொவினோ தாமஸின் மிரட்டலான மின்னல் முரளி ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.