பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அந்த 15 வயதான சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். தற்போது, தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள்
அனைவரும் பள்ளிக்குக்கு சென்று வருகின்றனர்.

ஆனால், கடந்த மாதம் வரை பள்ளிகள் திறக்காப்படாத நிலையி்ல, அந்த மாணவி தனது வீட்டில் இருந்து வந்தார்.

அப்போது, தனது மகள் மீது சபலப்பட்ட அந்த சிறுமியின் தந்தையான 39 வயதான முனியசாமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெற்ற மகள் என்றும் பார்க்காமல்
அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

அத்துடன், தனது மகளிடம் பாலியல் இச்சைகளை எல்லாம் செய்துவிட்டு, “இது குறித்து உன் அம்மாவிடம் எதுவும் சொல்லிவிடாது” என்று, தனது மகளை அவர்
மிரட்டவும் செய்திருக்கிறார்.

அதே நேரத்தில், அந்த 15 வயது சிறுமியை, ஓட்டப்பிடாரத்தை அருத்த மேட்டூர் வ.உ.சி காலனியைச் சேர்ந்த ராசுக்குட்டி என்பவரின் மகன் 19 வயதான அழகு என்கிற
அறிவுமதி என்ற இளைஞன் காதலிப்பதாக கூறி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இப்படியான சூழ்நிலையில் தான், அந்த சிறுமி வீட்டில் இருந்த வந்த நிலையில், நேற்று முன் தினம் வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் வயிற்று வலியால்
துடித்த அந்த சிறுமியை, அவரது தாயார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார். 

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக” சிறுமியின் தாயிடம் மருத்துவர்கள் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், “என்ன நடந்தது?” என்று சிறுமியிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

அப்போது, கதறி அழுத அந்த சிறுமி, மேற்கொண்டு கூறிய தகவல் எல்லாம், அவரது தாயாருக்கு பேரிடியாக இருந்து உள்ளது. 

அப்போது தான், சிறுமியின் தந்தையான முனியசாமி மற்றும் சிறுமியின் காதலன் ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்த விசயம் தெரிந்து அவர் இன்னும்
அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

இதனையடுத்து, இது குறித்து சிறுமியின் தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்
பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தை முனியசாமி மற்றும் சிறுமியின் காதலன் அறிவுமதி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த
போலீசார்ர், அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.